Thursday, June 25, 2009

நொடி(டிவிட்டர்) திருக்குறள்


திருவள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்தில் புரட்சிதான் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெண்பா இலக்கணத்திற்குள் கட்டுப்படாமல் இரண்டு அடிகளில் சுறுக்கென்று சொல்லி வைத்துள்ளாரே !

டிவிட்டர் - மக்களை இணைக்கும் ஒரு புரட்சி கருவி என்று கூறுகிறார்கள். நான் அங்கு சென்று பதிந்தாலும், இன்னும் அவ்வளவாக பழகவில்லை.

ஒரு செய்திக்கு 140 எழுத்துக்கள்தான் அதிகபடி ! அதற்குமேல் அனுமதியில்லை.

திருக்குறள் ஒவ்வொன்றும்

2 அடி
7 சொற்கள்
அதிகமாக 45 எழுத்துக்கள் இருக்கலாம்.

ஆதலால் திருக்குறளை மைக்ரோ-டிவிட்டர் என்று சொல்லலாமா ?

ஆமாம் டிவிட்டர் என்ற சொல்லின் பொருள் என்ன என்று நிகண்டு( Thesaurus) பார்த்ததில்

நொடி என்பது பொருத்தமாக இருக்கிறது  !!!


2 comments:

Anonymous said...

சிந்திக்க வைக்கும் கருத்துகள், நேர்த்தியான நடை. தொடர்ந்து எழுதவும்.

அன்புடன்,
ஸ்ரீதர்

Anonymous said...

டிவிட்டரும் - திருக்குறளும்
காம்பினேசன் புதுசா இருக்கு....