Wednesday, May 31, 2006


விமானத்தில் ஓர் பெரியவரை சந்தித்தேன்
வணக்கம் என்றேன்
வணிக அட்டை ஒன்று கொடுத்தார்
பற்பல கோடிகளுக்கு சொந்தக்காரர் என்றது
அவர் அட்டை
வீடு எங்கே என்றேன்?
சென்னை
லாஸ் ஏஞ்சல்
சூரிக்
சிங்கப்பூர்
இங்கெல்லாம் சொந்தத்தில் வீடு உண்டென்றார்
எனினும்..
வருடத்தில்
பாதி நாட்கள் நட்சத்திர ஓட்டல்களில்
மீதி நாட்கள் விமானங்களில்
என்றார்.


ஒரு இனிப்புக் கடை
முதலாளிக்கு
சக்கரை நோய்.
துண்டு பால்கோவை கூட
மற்றவர் சாப்பிட்டுதான் பார்க்க முடியும்.


வகுத்தவன் வகுத்தவகை அல்லால் - கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

[ஊழ் 38 : 7]
எவ்வளவு கோடி சேர்த்தாலும், இயற்கை(இறை) வகுத்தது அல்லாமல் மற்றவற்றை அனுபவிப்பது கடினமாகும்.



அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்