Sunday, December 06, 2009

பொருள்கோள்


'கோனார் உரை', பள்ளி பருவத்தில் திருக்குறளுக்கு பொருள் சொன்னது. பொழிப்புரை, கருத்துரை என்று விரிவாக இருக்கும். வளர்ந்த பின் பாவாணரும், இளங்குமரனாரும், கலைஞரும்  பொருள்வளம் கூட்டினர்.

திருக்குறளை இன்னும் ஆழமாக கற்க ஆரம்பித்தபோது நண்பர் சந்திரசேகர், 'பொருள்கோள்' என்று இதுவரை நான் கேள்வியுறாத ஒன்றை கூறினார்.  திருக்குறள் மற்றுமன்றி எந்தவொரு செய்யுளையும் பொருள்கோள் நடையில் அமைத்து பொருள் கொள்ளலாம். அதாவது வாக்கியம், எழுவாய்(எ), செயப்படு பொருள்(செ), பயனிலை(ப) என்று மூன்று பகுதிகளை கொண்டிருக்கும். இம்முறையை பின்பற்றி எந்த ஒரு திருக்குறளையும் நேரடியாக பொருள் கொள்ளலாம் !

அ.கி.பரந்தாமனார்('நல்ல தமிழ் எழுத வேண்டுமா ?' - அல்லி நிலையம், சென்னை) எ-செ-ப  பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் ?  
'பறவை கூட்டைக் கட்டுகிறது ' என்ற வாக்கியத்தில் பறவை என்பது எழுவாய்(வாக்கியத்திற்கு வாயிலாக இருப்பது. கருத்து, பெயர், இடம் போன்றவை) .  கட்டுகிறது என்பது பயனிலை(எழுவாயின் பயனை தன்னிடத்தே கொண்டிருப்பது. பொதுவாக செயலைக் குறிப்பது).  இந்த வாக்கியத்தில் கூடு என்பது  
செயப்படுப் பொருள்.   


சில உதாரணங்கள் :


வா !  -  பயனிலை மட்டும் .  எழுவாயும், செயப்படுப் பொருளும் சொல்லாமல் உணர்த்தப் படுபவை.


முருகன்(எ) அழகன்(ப)  - செயப்படுப் பொருள் இல்லாத உள்ள ஒரு பொது வாக்கியம்.


பல முதலைகளை ஏரியில் பார்த்தேன் - முதலைகள்(எ) , பார்த்தேன்(ப).  ஏரியில் செயப்படு பொருள் போன்று தோன்றினாலும் அதுவும் எழுவாய்க்கு அடைமொழி தான்.  இவ்வாக்கியத்தின் பொருள் கோள் - (நான்) ஏரியில் பல முதலைகளைப் பார்த்தேன் என்று கொள்ளலாம்.


திருக்குறளுக்கு வருவோம்...


அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி
பகவன் முதற்றே உலகு.


இதை எ-செ-ப முறை பொருள்கொண்டால்
எழுத்தெல்லாம்(எ) அகரம்(செ) முதல் ; உலகிற்கு(எ) ஆதி பகவன்(செ) முதற்று (ப).




வேறு சில உதாரணங்களை வைத்து திருக்குறள்களை பொருள் கொள்ள முயற்சிப்போம்.












2 comments:

Anonymous said...

பொருள்கோள் பற்றி விவரித்து எப்படி பொருள் கொள்வது என்று விவரித்து இருப்பது அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.....

Yazhini said...

வருகைக்கு நன்றி. பொருள் கோள் மிகவும் எளிதான முறை. ஏன் பள்ளிப் பாடத்தில் இல்லை என்பது புரியவில்லை. 'தரகர் இல்லாத தமிழ்' என்று என் நண்பர் ஒருவர் கூறுவார்.