ஒருவர் செய்யும் உதவியை எப்படி அளப்பது? நகுலன் என்ற இளைஞர் ஒருவர் தொழில் தொடங்க எண்ணினார். $ 25,000 முதலாக தேவைப் பட்டது. அவர் ஓரளவு அறிந்த பெரிய செல்வந்தரிடம் சென்றார். அந்த செல்வந்தரும் நகுலனின் தொழில் திட்டத்தை கேட்டறிந்தார். நகுலனிடம் இருந்த ஊக்கத்தையும் திறமையையும் கண்டறிந்தார். நகுலன் கேட்ட பணத்தை மனமுவந்து கொடுத்தார். நகுலனும் நன்றியுடன் பெற்றுக் கொண்டு திரும்பினார்.
வியாபாரத்தை ஆரம்பித்து, கருத்துடன் உழைத்தார் நகுலன். 20 ஆண்டுகளில், பல மில்லியன்கள் இலாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்தது. நூற்றுக் கணக்கான பேர் அங்கு பணிபுரிந்து பயன் பெறுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் நகுலன் பெற்ற உதவியை எப்படி அளப்பது? உதவி $25,000 தான் என்று சொல்வதா? அதன் பயனாக அமைந்த பல மில்லியன்கள், பலருக்கு வேலை வாய்ப்பு, உலகிற்கு பயன் என்று அளப்பதுதானே சரியானது.
உதவி வரைத்தன்று உதவி – உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
[ செய்நன்றி அறிதல் 11: 5 ]
{சால்பு – திறன்}
உதவியின் அளவை வைத்து அந்த உதவியை அளக்க முடியாது. அந்த உதவியைப் பெற்றவரின் திறனை பொருத்தே அந்த உதவியை அளவிட முடியும்.
Tuesday, April 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment