மாற்றி யோசி !
'இனிமேல் இயற்பியலில் புதிதாக கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றுமில்லை' - 1900 ஆம் ஆண்டு கெல்வின் பிரபு என்ற ஆங்கிலேய விஞ்ஞானி ஒரு அறிவியல் மாநாட்டில் அறிவித்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே அறிவியல் ஆராய்ச்சியில் விடிவெள்ளியாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் குவாண்டம் தத்துவம் பெரியதோர் புரட்சியை ஏற்படுத்தும் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாதது தான் !1900 -1905 ஆண்டுகளில் குவாண்டம் தத்துவத்தை ஐன்ஸ்டீன் வெளியிட்ட போது கல்லூரி படிப்பை மட்டுமே முடித்திருந்தார். இதை அடிப்படையாக வைத்து அவர் எவ்வளவு முயன்றும் முனைவர் பட்டத்தை அவரால் பெற முடியவில்லை. குவாண்டம் - முனைவர் பட்ட படிப்புக்கு தகுதியான தலைப்பு இல்லை என்று ஆய்வு குழுவால் நிராகரிக்க பட்டது. என்ன விநோதம் ! முனைவர் பட்டம் பெறாவிட்டால் பல்கலையில் ஆசிரியர் வேலை கிடைக்காது. என்ன செய்வது என்று யோசித்தார் ஐன்ஸ்டீன்.
ஏப்ரல் 1905 - சூரிக் பல்கலைக் கழகத்தில் 'அணுக்கூட்ட பரிமாணங்களின் புதிய கணிப்பு' ( 'A New Determination of Molecular Dimensions' ) என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார். அதுவே ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டத்தை பெற்று தந்தது.
ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே - ஒல்லாக்கால்
செல்லும் வாய்நோக்கிச் செயல். [ வினை செயல்வகை 68 : 3 ]
அனைத்து வழிகளிலும் முயன்று செயல்படு. முடியவில்லை என்றால், மாற்று வழியில் செயல்படுத்து !
No comments:
Post a Comment