ஓர் வித்தியாசமான செல்வந்தர் இருந்தார். தன்னிடம் உதவி கேட்டு வருவோர்கள் தன்னுடைய துன்பங்களை சொல்லும்போது பொறுமையாக கேட்டுக் கொள்வார். கடைசியாக தன் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரக்கத்தை மட்டும் தெரிவித்து எந்த உதவியும் செய்யாமல் அனுப்பி விடுவார். இப்பழக்கம் அந்த செல்வந்தரின் வாடிக்கை !.
நம்மிடம் இந்த குணம் சிறிதாயினும் இருக்கும். நம்மிடம் கேட்கப் படும் உதவியை நம்மால் செய்ய இயலும். இருப்பினும் இரக்கப்படுதலோடு உதவியை மறுத்தோ அல்லது தேவையை விட சற்று குறைத்தோ கொடுக்கும் சூழ்நிலை வரும். இதற்கு ஒரு அளவுகோல் ஒன்றை வகுக்கலாம். நாம் செய்யும் உதவி முழுமையாக இருந்தால்(100%) இரந்தவரிடம் இன்முகத்தை தோற்றுவிக்கும்(100%). மாறாக இரக்கம்(பரிதாபம்) மட்டுமே கொண்டால் ( 0 % ஈகை ) இரந்தவரிடம் இன்முகம் காண முடியுமா ?
இன்னாது இரக்கப் படுதல் - இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
Tuesday, November 01, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment